சேலம் மாவட்ட வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் சரண்

schedule
2015-10-10 | 14:58h
update
2026-04-16 | 12:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே சேலம் வாலிபரை அடித்து கொலை செய்த வழக்கில் வாலிபர்கள் இருவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ மகன் ராஜ்குமார்,30, கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி ராதா(25), என்பவருடன் பெரம்பலுார் மாவட்டம், விஜயகோபாலபுரம் கிராமத்தில் வசித்து வந்தார்.

Advertisement

இந்நிலையில் கடந்த 7ம் தேதி மாலை 4.30 மணியளவில் சிறுவாச்சூர் அருகே உள்ள எழில் நகர் பகுதியில் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறி்த்து பெரம்பலுார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தார்.

இந்நிலையில் நேற்று சிறுவாச்சூர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் விஜயகோபாலபுரம் கிராமத்தை ரெங்கநாதன்(36), அரணாரை சேர்ந்த ராஜா (35), ஆகியோர் சரணடைந்ததை அடுத்து அவர்களை போலீஸிடம் ஒப்படைத்தார்.

போலீஸார் ரெங்கநாதன், ராஜா ஆகியோரிடம் விசாரித்தில் ராஜ்குமார், ராஜாவிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்ததாகவும், கடனை திருப்பி கேட்டபோது தர மறுத்ததுடன் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரெங்கநாதன் தனது நண்பரான ரெங்கநாதன் உதவியுடன் ராஜ்குமாரை கல்லால் அடித்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். பெரம்பலுார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், இருவரையும் நீதிமன்றததில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 12:45:38
Privacy-Data & cookie usage: