டிஎன்பிஎல்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியது ரூபி திருச்சி வாரியர்ஸ்

schedule
2018-07-12 | 17:46h
update
2026-05-26 | 14:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘டி.என்.பி.எல்.’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் அஷ்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அந்த அணியில் அதிகபட்சமாக ராமலிங்கம் ரோகித் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட 46 ரன்கள் சேர்த்தார். இறுதியில் திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இறுதியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.05.2026 - 14:26:44
Privacy-Data & cookie usage: