“டிரீம்ஸ் கேசுவல் வேர்” ஆயத்த ஆடை கடை திறப்பு விழா இன்று நடந்தது

schedule
2015-07-13 | 19:00h
update
2026-03-26 | 22:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Advertisement

பெரம்பலூர் : இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி அளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்புறம் உள்ள பி.ஆர். காம்ளக்சில் “டிரீம்ஸ் கேசுவல் வேர்” என்னும் ஆயத்த ஆடை அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. இதனை அஸ்வின்ஸ் நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், வள்ளலார் நிறுவனங்களின் உரிமையாளர் ஜெயபால் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் அஸ்வின்ஸ் நிறுவனங்களின் தலைவர் வரதராஜன், வள்ளலார் உரிமையாளர் ஜெயபால் இருவரும் முதல் விற்பனையை செய்தனர், அதனை வள்ளலார் அரவிந்தன் பெற்றுக் கொண்டார்.

இத்திறப்பு விழாவில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், அஸ்வின்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கணேசன், பெரம்பலூர் ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன், ரவிச்சந்திரன், சுபிக்‌ஷா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுவாமிநாதன், முத்து மற்றும் ஜீபிடர் ஸ்டியோ மோகன்ராஜ், நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், செய்தியாளர்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

“டிரீம்ஸ் கேசுவல் வேர் கடையின் உரிமையாளர்கள் வெங்கட், சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“டிரீம்ஸ் கேசுவல் வேர்” (ஏ.சி. வசதி செய்யப்பட்டது) கடையின் உரிமையாளர்களான வெங்கட், சிவானந்தம் ஆகிய இருவரும் தெரிவித்தாவது: ஆடவர், மகளிர், குழந்தைகளுக்கு தேவையான குர்தீஸ், இரு பாலருக்கும் தேவையான டீசர்ட்கள், டிரவுசர்கள், லெகினஸ்கள், உள்ளாடைகள் என அனைத்து வகையான ஆயத்த ஆடைகளும் தரமானதாக கிடைக்குமென தெரிவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.03.2026 - 22:16:13
Privacy-Data & cookie usage: