திண்னையில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் கீழே தவிறி விழுந்து சாவு.

schedule
2015-07-29 | 15:52h
update
2026-06-16 | 13:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : வாலிகண்டபுரம் அருகே வீட்டுத் தின்னையில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் கீழே தவறி விழுந்ததில் உயிரிழந்தார் .

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் பன்னீர்செல்வம்(39), திருமணமாகாதவர். இவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் அளவுக்கு அதிகாமாக மது அருந்திய பன்னீர்செல்வம் அவரது வீட்டின் முதல் மாடியில் உள்ள திண்னையில்
தூங்கியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் பன்னீர்செல்வம் தூங்கி எழுந்து வராததால் அவரது பெற்றோர் முதல் மாடிக்கு சென்று பார்த்த போது அவர் தூங்கிய திண்னையிலிருந்து 4 அடி பள்ளத்தில் உள்ள பால் கனியில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வத்தின் பெற்றோர் சம்பவம் குறித்து மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த போலீசார் டிஎஸ்பி கோவிந்தராஜூ தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று பன்னீர்செல்வத்தின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 13:53:16
Privacy-Data & cookie usage: