தேர்தலில் நேர்மையுடன் வாக்களிப்பது குறித்து தொடர்பான உறுதிமொழி ஏற்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்தது.

schedule
2016-05-01 | 13:49h
update
2026-06-23 | 14:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதிகளிலும் மொத்தம் 638 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது வாக்குச்சாவடி அளவிலான விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவின் உறுப்பினர்கள் 100 சதவீத நேர்மையான வாக்குப்பதிவு குறித்து பொது மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள்.

Advertisement

நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டம் 100 சதவீத நேர்மையான வாக்குப்பதிவை எய்திடவேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட திருப்பெயர், மேலப்புலியூர், வேலூர், சத்திரமனை ஆகிய கிராமங்களிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் நூத்தப்பூரிலும்,

ஆலத்தூரில் சாத்தனூரிலும் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களால் பொதுமக்களிடம் நேர்மையுடன் வாக்களிப்பது குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும், தேர்தல் விதிமுறை மீறல் குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 14:53:01
Privacy-Data & cookie usage: