நடத்துனர் இன்றி பேருந்துகள் இயக்கப்படுகிறதா.? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

schedule
2018-07-12 | 14:24h
update
2026-04-14 | 12:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுகிறதா என்பது குறித்து வரும் 18-ம் தேதிக்குள் போக்குவரத்து துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பல பேருந்துகளில், நடத்துனர் இல்லாமல், ஓட்டுனர் மூலம் மட்டும் இயக்கப்படுவதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அதில் பேருந்துகளில் நடத்துனர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகவும், ஆனால், தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் நடத்துனர் இல்லாமல் பேருந்து இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், மாநகரம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்படுகிறதா என்பது குறித்து வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க போக்குவரத்துறை செயலாளர் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 12:07:20
Privacy-Data & cookie usage: