நாமக்கல்லில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

schedule
2018-12-24 | 17:46h
update
2018-12-24 | 17:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Plastic awareness rally in Namakkal

நாமக்கல்லில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.நாமக்கல் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் செல்வம் கலை அறிவியல் கல்லூரி சார்பில் சின்னமுதலைப்பட்டியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Advertisement

விழாவிற்கு நாமக்கல் நில வளவங்கி தலைவர் ராஜா, செல்வம் கல்லூரி முதல்வர் ராஜவேல் ஆகியோர் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் சரவணன், சின்னமுதலைப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதாம்பாள்சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சின்னமுதலைப்பட்டி அம்மச்சி அம்மன் கோவில் முன்பு துவங்கிய பேரணி, என்ஜிஜிஓ காலனி, எம்ஜிஆர் நகர், காதி போர்டு காலனி, அன்பு நகர் வழியாக மீண்டும் அம்மச்சி அம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் அபாயம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

இதில் நாமக்கல் அதிமுக துணைச்செயலாளர் நரசிம்மன், 4வது வார்டு செயலாளர் சரவணன், மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சித்ரா, 14 வது வார்டு செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 12:51:47
Privacy-Data & cookie usage: