பெரம்பலுார் மாவட்டத்தி்ல மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு அரசின் நிவாரணமும், தேசிய வேளாண் காப்பீடு தொகையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் விவசாயிகள் சேதமடைந்த பயிர்களுடன், பெரம்பலுார் கலெக்டர் தரேஷ்அஹமதுவிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கோரியிருப்பதாவது:
மக்காசோளம் 1.20 லட்சம் ஏக்கர், பருத்தி 50 ஆயிரம் ஏக்கர், வெங்காயம் 10,700 ஏக்கர், மரவள்ளி கிழங்கு 4,500 ஏக்கர், மஞ்சள் 3,500 ஏக்கர் பெரம்பலுார் மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
தொடர் மழையால் மேற்கண்ட பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை மிக குறைவு. ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற எங்களின் கோரி்ககையை அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
இதோடு பெரம்பலுார் மாவட்ட விவசாயிகளுக்கு மக்காசோளத்துக்கு ரூ.11,900ம், பருத்திக்கு ரூ.14,000ம், வெங்காயத்துக்கு ரூ.25,000ம் தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தின்கீழ் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.