நீட் பயிற்சி வகுப்பு நடத்தினால் உரிமம் ரத்து…பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை..!

schedule
2018-07-05 | 17:45h
update
2026-04-19 | 00:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பள்ளி நாட்களில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தும் பள்ளிகளின் உரிமம் ரத்துச் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, பள்ளிகளில் உரிய பாடங்களை எடுக்காமல், நீட் பயிற்சி வகுப்புகள் நடப்பதாக குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி வேலை நாட்களில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தும் பள்ளிகளின் உரிமம் ரத்துச் செய்யப்படும் என்று பேசினார். மேலும், சிபிஎஸ்இ பள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்றும், மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 00:47:45
Privacy-Data & cookie usage: