பணி நிறைவு பாராட்டு விழா

schedule
2015-08-03 | 14:44h
update
2026-06-16 | 13:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: அரும்பாவூர் அரசு மாணவர் விடுதி சமையல் பணியாளர் ஆறுமுகத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி விடுதி பணியாளர் சங்க மாநில கவுரவத் தலைவர் தங்கவேலட தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் பெரியசாமி வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நல அலுவலர் ராஜேந்திரன் பாராட்டி சிறப்புரை ஆற்றினார்.

Advertisement

தனிவட்டாசியர் ஷாஜகான், ஏ.ஐ.டி.யூ.சி பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஞானசேகரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி விடுதி பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஆண்டியப்பன், மாநில பொதுச்செயலாளர் காமராஜ், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க பெரம்பலூர் மாவட்டத் தலைவர் அசோகன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி விடுதி பணியாளர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் காந்தி, தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முத்துக்குமார், அனைத்து ஆசிரியர் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமதாஸ், அரும்பாவூர் அரசு மாணவர் விடுதி காப்பாளர் கோபாலகிருஷ்ணன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அரும்பாவூர் அரசு மாணவர் விடுதி சமையல் பணியாளர் ஆறுமுகம் ஏற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி விடுதி பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 13:52:48
Privacy-Data & cookie usage: