பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணிகளை மேற்கொள்ளலாம்

மாவட்ட ஆட்சியர் தகவல்.

schedule
2015-08-05 | 18:25h
update
2026-06-16 | 16:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணிகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணிகளை மேற்கொள்ளலாம்.

Advertisement

மேலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணிவின் போது ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் அன்று எடுத்து வர வேண்டும். 05.08.2015 தேதி முதல் 19.08.2015 வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.

பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும்,

www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவய்ப்புத்துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற வேலைவய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவ, மாணவிகளும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
என அவர் தெரிவித்துள்ளார;.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 16:21:26
Privacy-Data & cookie usage: