பரமத்திவேலூர் அருகே டூ வீலரைத் திருடிச்சென்ற வடமாநில வாலிபர் விபத்தில் சிக்கி காயம்

schedule
2019-01-03 | 16:22h
update
2019-01-03 | 16:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Near the northern state of young man who stole a Two Wheeler injured in an accident near Paramathivellur

நாமக்கல் : பரமத்தி வேலூர் அருகே வீட்டின் டூ வீலரைத் திருடிச்சென்ற வடமாநில வாலிபர் நாமக்கல் அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

பரமத்தி வேலூர் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள பாரதி நகரில் புதிதாக வீடு கட்டி வரும் பள்ளி ஆசிரியர் தனது வீட்டின் முன்புறம் தனது டூ வீலரை நிறுத்திவிட்டு புதிய வீட்டின் சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண் ஒருவர், நாமக்கல் – சேலம் நெடுஞ்சாலையில் புதன்சந்தை பகுதியில் உங்களது டூ வீலரை ஓட்டி வந்தவர் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது, அவரது டூ வீலர் காணாமல் போனது அவருக்கு தெரியவந்தது.

Advertisement

இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். பரமத்தி வேலூர் போலீசார் நடத்திய விசாரணையில், டூ வீலரைத் திருடிச் சென்றவர் படமுடிபாளையத்தில் உள்ள அட்டை தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது17) என்பது தெரியவந்தது. இதையடுத்து, விபத்தில் காயமடைந்து நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வரும் சந்தோஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 10:25:34
Privacy-Data & cookie usage: