பிரதமர் மோடியின் உயிருக்கு எப்போதும் இல்லாத வகையில் அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு அருகே மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் செல்லத் தடைவிதித்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.கடந்த 7-ம் தேதி புனே போலீஸார் டெல்லி நீதிமன்றத்தில் கூறுகையில் டெல்லியில் ஒருவீட்டில் இருந்து சந்தேகத்துக்கு இடமானவகையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரிடம் இருந்து கைப்பற்ற கடிதத்தில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றசம்பவம் போன்று பிரதமர் மோடியைக் கொல்ல திட்டமிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.மேலும், சமீபத்தில் பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்ற போது, அவரின் 6 அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் உள்ளே புகுந்தார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் இருப்பதையே காட்டுகின்றன.இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் ஆகியோர் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தினார்கள்.