புதுப் பெண் மர்ம சாவு! தாய் போலீசில் புகார்

schedule
2015-11-14 | 15:13h
update
2026-06-18 | 10:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் எசனை அருகே உள்ள நார்காரன் கொட்டாய் (எ) கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பூரணி (வயது 20). இவர்களுக்கு கடந்த மே மாதம் தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்ட நிலையில் பூரணி பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து பெரம்பலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இத்தகவலை உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து பூரணியின் தாய் லாடபுரத்தை சேர்ந்த செல்வி பெரம்பலூர் போலீஸ் மற்றும் சார் ஆட்சியர் மதுசூதனரெட்டியிடம் புகார் மனு கொடுத்தார். அதில் பூரணி தூக்குப்போட்டு தற்கொலை செய்யவில்லை என்றும், அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பூரணி எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமை காரணமாக பூரணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 10:31:44
Privacy-Data & cookie usage: