பெரம்பலூர் : பெரம்பலூர் நகரில் நாளை (ஜுலை. 24) வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம் அறவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வியாழக் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூர் நகரப் பகுதிகளான பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், கடைவீதி, பாலக்கரை, நான்கு சாலை பகுதி, மின்நகர், துறைமங்கலம் மற்றும் கிராமிய பகுதிகளான சிறுகுடல், பீல்வாடி, அசூர், சித்தளி, எளம்பலூர், வடக்குமாதவி, இந்திரா நகர், செங்குணம், அருமடல், கீழப்புலியூர், எஸ்.குடிக்காடு, கே.புதூர், சமத்துவபுரம், காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.