பெரம்பலூரில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்

schedule
2015-08-10 | 15:57h
update
2026-06-16 | 17:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, மாவட்ட திமுக சார்பில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திமுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலர் குன்னம். சி. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

நகர செயலர் எம். பிரபாகரன், ஒன்றிய செயலர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, எஸ். நல்லதம்பி, தி. மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞரணி மாநில துணை செயலர் சுபா. சந்திரசேகரன் பேசியது:

Advertisement

தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சீரழிந்து வருகின்றனர். மதுபானத்துக்கு எதிராக போராடி உயிரிழந்த சசிபெருமாளின் குடும்பத்துக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். மதுவுக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் என். ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள்கள் கி. முகுந்தன், என். வெங்கடாஜலம், மாநில நிர்வாகி பா. துரைசாமி, மாவட்ட பொருளாளர் ஆர். ரவிச்சந்திரன், துணைச் செயலர்கள் என். ஜெகதீசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராஜ்குமார், மாவட்ட அணி செயலர்கள் மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 17:40:47
Privacy-Data & cookie usage: