பெரம்பலூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் நீளம் தாண்டுதலில் மாநில அளவில் முதலிடம்: ஆட்சியர் பாராட்டு.

schedule
2015-12-25 | 08:56h
update
2026-04-22 | 06:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

தமிழக (மாநில) அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளில் நீளம் தாண்டுதல் பிரிவில் முதலிடம் பிடித்த ஆயுதப்படை காவலர் இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது, சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 18 முதல் 20 ம் தேதி வரை மாநில அளவிலான தடகளப்போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர். வேப்பந்தட்டை ஆயுதப்படையில் காவலராக பணி புரிந்து வரும் நூத்தப்பூரை சார்ந்த இளங்கோவன் என்பவர் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல் பிரிவில் முதலிடம் பெற்றார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது சந்தித்து, முதலிடம் பிடித்தற்காக வழங்கப்பட்ட பதக்கத்தையும், சான்றிதழையும் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

Advertisement

மேலும், வருகின்ற மார்ச் மாதம் கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகளப் போட்டியிலும், ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூரில் நடைபெற உள்ள ஏசியன் மாஸ்டர்ஸ் தடகளப்போட்டியிலும் கலந்து கொள்ள தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 06:08:29
Privacy-Data & cookie usage: