பெரம்பலூர்அருகே விசிக-வினர் காரில், கட்டுகட்டாகபணம்! சுமார் ரூ.2 கோடியை நூதன முறையில் எடுத்து சென்ற போது பறிமுதல்!!

schedule
2019-04-03 | 18:09h
update
2019-04-03 | 18:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, in the VCK Party car, bundle of money ! In modern, taking around Rs 2 crore seized during a trip !!

பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகள் காரில் நூதன முறையில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ 2 கோடியே 99 லட்சத்து 71 ஆயிரத்து 500-யை பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், பேரளி சுங்க சாவடி பகுதியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறை ஏடிஎஸ்பி ரங்கராஜன் தலைமையிலான காவல்துறையை சேர்ந்த குழுவினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

Advertisement

இரவு 10மணியளவில் திருச்சியில் இருந்து வந்த டாடா சாபாரி TN -31BU- 0585 என்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது அவ்வாகனத்தில் கோடிக்கணக்கில் பணம் மறைத்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது .

இதையடுத்து அந்த வாகனத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, குன்னம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலையில் வாகனத்தை சோதனையிட்டதில் வாகனத்தில் பல்வேறு பகுதியில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ. 2 கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த பணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாகி தங்கதுரை மற்றும் 2பேர் இந்த பணத்தை
திருச்சியிலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டு பின்னர் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதும், பணம் பிடிக்கப்பட்ட இடம் சிதம்பரம் தொகுதியை சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 00:32:54
Privacy-Data & cookie usage: