பெரம்பலூர்: அடுத்தடுத்த 4 வீடுகளில் 10 பவுன் தங்க நகை; ரூ.2 லட்சம் ரொக்கம் கொள்ளை!

schedule
2025-11-13 | 12:10h
update
2025-11-13 | 14:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 10 pounds of gold jewelry; Rs. 2 lakh cash looted from 4 adjacent houses!

பெரம்பலூர் மாவட்டம், வ.களத்தூர் அடுத்துள்ள பிம்பலூர் கிராமத்தில் பாண்டகபாடி செல்லும் சாலையில் வசிப்பவர்கள் ராமசாமி-மல்லிகா, மகேந்திரன்-கலையரசி, சுப்ரமணியன்-ரெங்கநாயகி, துரைசாமி-பாப்பாத்தி விவசாய கூலித் தொழிலாளிகளான இவர்கள் 8 பேரும் ஒரே தெருவில் அடுத்தடுத்த 4 வீடுகளில் வசித்து வருகின்றனர்.

நேற்றிரவு வழக்கம் போல் தங்களது குழந்தைகளுடன் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மல்லிகா வீட்டில் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும், கலையரசி வீட்டில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும், ரெங்கநாயகி வீட்டில் வைத்திருந்த ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் என மொத்தம், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 பவுன் தங்க நகை, ரூ. 2 லட்ச ரூபாயை முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் திருடி சென்றுள்ளது.

Advertisement

இத்திருட்டு சம்பவம் இன்று காலை வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் வ.களத்தூர் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், கொள்ளையர்கள் விட்டு தடயங்களை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்ததுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே பிம்பலூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த ஒரு நபர் சுற்றித்திரிந்ததாகவும் அவரை வழிமறித்து விவரம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்ததோடு, அவரிடம் பேசுவதை தவிர்த்து விட்டு அங்கிருந்து ஓடியதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், முகமுடி கொள்ளையர்களே இந்த திருட்டு சம்பவத்திலும் விடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நகர், புறநகர் மற்றும் கிராமப் பகுதிகள் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிகழும் தொடர் திருட்டு சம்பவங்களை தடுத்து நிறுத்துவதுடன், போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்பதுடன் பொதுமக்களின் உடமைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று பாடாலூரில் நகைக்கடையை கொள்ளையடிக்க முயன்ற சம்பவமும், இந்த 4 வீடுகளில் கொள்ளை சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 04:08:48
Privacy-Data & cookie usage: