பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் பலி

schedule
2017-09-17 | 18:43h
update
2026-07-04 | 21:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Unidentified vehicle hit a deer killed near in perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகளில் மான், மயில், பன்றி, முயல், குரங்கு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் இன்று மாலை பெரம்பலூர் – அரியலூர் சாலையில் சித்தளி வனப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற 15 வயது மதிக்கதக்க புள்ளி மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த புள்ளி மானை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

மான் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் மற்றும் இரை தேடி வனத்தை விட்டு வெளியே வரும் போதும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகி உயிரிழப்பது பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கதையாகி வருகிறது.

இதனை தடுக்க வனப்பகுதியிலும், முக்கிய சாலை ஓரங்ளில் மின் வேலி அமைப்பதுடன், வனப்பகுதியில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கியியல் ஆர்வலர்களும், பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 21:15:26
Privacy-Data & cookie usage: