பெரம்பலூர் அருகே உள்ள அரும்பாவூர் சித்தேரியில் மீன்பிடித் திருவிழா

schedule
2016-05-08 | 15:45h
update
2026-06-24 | 00:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் சித்தேரியில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடந்து வருகிறது.

இந்த ஏரியில் அதிகளவு தண்ணீர் இருந்தது. இதில் ஏராளமான மீன்கள் வாழ்ந்து வந்தது. இந்த ஆண்டு மீன் பிடித்திருவிழா இன்று நடந்தது.

Advertisement

இன்று காலை 7.30 மணி முதல் ஏரியில் இடுப்பளவு தண்ணீர் வரை இறங்கி பொதுமக்கள் கத்தா, வலை, கூடை சல்லடை போன்றவற்றை கொண்டு மீன்களை பிடித்தனர். கெழுத்தி, கெண்டை, கட்லா, போன்ற பல வகையான மீன்கள் கிடைத்தது . இதில் ஏராளமான மீன்களை பொதுமக்கள் பிடித்து சென்றனர்.

அரும்பாவூர், அ.மேட்டூர், விஜயபுரம், அய்யர்பாளையம், அன்னமங்கலம், அரசலூர் பூஞ்சோலை, ஈச்சங்காடு, பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், கடம்பூர், கள்ளப்பட்டி, தழுதாழை, தாழைநகர், தொண்டைமாந்துறை, வெங்கலம், மலையாளப்பட்டி, உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்து அள்ளி சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 00:45:52
Privacy-Data & cookie usage: