பெரம்பலூர் நகரில் உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி இன்று மதியம் நிரம்பியது. அதனை தொடர்ந்து துறைமங்கலம் ஏரியும் நிரம்ப உள்ளது.

vellanthanki-amman-lakeவெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கு வந்த தண்ணீரை அப்பகுதி உழவர்கள் பூ தூவி வரவேற்று வணங்கினர். அதில் மதனகோபாலசாமி அறங்காவலர் குழு பெ.வைத்தீஸ்வரன், நகராட்சித் தலைவர் சி.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகளில் 40 ஏரிகள் இன்று முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. அடுத்த கட்டமாக துறைமங்கலம், எசனை, நெற்குணம், செங்குணம், கீழக்கரை மதவானையம்மன் ஏரி, தழுதாழை ஏரிகள் நிரம்ப தயாராகி வருகின்றன.

சிறுவாச்சூர், பில்லங்குளம், அத்தியூர், ஆண்டிக்குரும்பலூர், வரகுபாடி ஏரி, காரை சின்ன ஏரி, தெரணி ஏரி, நாரணமங்கலம், அயிலூர் ஏரிகள் பாதிக்கு மேற்பட்ட நீரை கொள்ளளவில் பெற்றுள்ளன.

தேனூர், கீழப்புலியூர், வெங்கனூர், செட்டிக்குளம், கண்ணப்பாடி, களரம்பட்டி, புதுநடுவலூர், பேரையூர் , காரை பெரிய ஏரி, பொம்மனப்பாடி, லாடபுரம் சின்ன ஏரி, து.களத்தூர் பெரிய ஏரி, காரியனூர், சாத்தனவாடி, கை.களத்தூர், நூத்தப்பூர், துறைமங்கலம் சின்ன ஏரி, து.களத்தூர் சின்ன ஏரி உள்ளிட்ட ஏரிகள் 50 சதவீத கீழ் கொள்ளவு நீரை பெற்றுள்ளன. இன்று மாலை 4 மணியளவில் பாடாலூரில் மட்டும் 3மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!