பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவி மாயம்: பெற்றோர் போலீசில் புகார்

schedule
2015-08-21 | 19:09h
update
2026-06-16 | 21:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே காணமல் போன தனது மகளை கண்டு பிடித்து தரக்கோரி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலிசார் கல்லூரி மாணவியை தேடி
வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் மீனா(19), இவர் பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

Advertisement

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த மீனாவின் பெற்றோர் அவரை உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைத்திடாததால் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மீனாவை தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 21:14:49
Privacy-Data & cookie usage: