பெரம்பலூர் அருகே கொள்யைன் வாகனம் மோதியதில் முதியவர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

schedule
2016-01-30 | 15:08h
update
2026-04-05 | 05:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலுார் மாவட்டம் கொளக்காநத்தம் அருகே உள்ள கொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் துரைமாணிக்கம் மனைவி வேம்பு (வயது 47), இவர் நேற்று மாலை 4 மணியளவில் இதே கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு டூவீலரில் வந்த இதே கிராமத்தை சேர்ந்த வீரசாமி மகன் சுரேஷ்(26), என்பவர் வேம்பு கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு டூவீலரில் தப்பினார்.

Advertisement

இதை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அவரை துரத்தினர் அப்போது அதிவேகமாக சென்ற டூவீலர் ஓட்டிய சுரேஷ், அவ்வழியே நடந்து சென்றுக்கொண்டிருந்த இதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி,70. என்பவர் மீது மோதினார்.

இதில் படுகாயமடைந்த ராமசாமி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமசாமியின் உறவினர்கள் கொளத்துார்–பெரம்பலுார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மருவத்துார் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இதனால் அவ்வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2026 - 05:44:33
Privacy-Data & cookie usage: