பெரம்பலூர் அருகே பஸ்சிலிருந்து இறங்கிய தொழிலாளி தவறி விழுந்ததில் உயிரிழப்பு

schedule
2016-05-10 | 08:00h
update
2026-06-24 | 00:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே பஸ்சிலிருந்து இறங்கிய ஹோட்டல் தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் மகாராஜன்(40), ஹோட்டல் தொழிலாளியான இவர் நேற்று இரவு பெரம்பலூரிலிருந்து சிறுவாச்சூர் நோக்கி தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார், பஸ் நிறுத்துவதற்கு முன்பு படியிலிருந்து இறங்கியுள்ளார்.

Advertisement

இதில் நிலை தடுமாறி கிழே விழுந்த மகாராஜன் தலையில் பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகாராஜனின் உடலைக்கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகாராஜனின் சகோதரர் ராஜேந்திரன் (35), என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் எளம்பலூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம்(50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 00:45:39
Privacy-Data & cookie usage: