பெரம்பலூர் அருகே பாறை உருண்டு விழுந்ததில் கல் உடைத்து கொண்டிருந்த தொழிலாளி சாவு

schedule
2015-11-27 | 17:17h
update
2026-06-18 | 14:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமம் காந்திநகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (65) கல் உடைக்கும் தொழிலாளி , இன்று தெரணி கிராமத்தில் மலைப்பகுதியில் கட்டுமானத்திற்கான கற்களை உடைத்து கொண்டிருந்தார். அப்போது மலையின் மேல் பகுதியில் இருந்து உருண்ட வந்த பாறை வெங்கடாசலத்தின் மீது மோதி மேல் ஏறியது. இதில் பாறையில் சிக்கிய வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடாசலத்தின் மகன் கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 14:16:56
Privacy-Data & cookie usage: