பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

schedule
2016-05-08 | 16:02h
update
2026-06-24 | 00:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சவேரியார் மனைவி சாந்தா (வயது 55). இவருக்கு கிராமத்தை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.

இன்று சாந்தா வயலில் உள்ள தக்காளி செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது மோட்டார் பெட்டியில் மின் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் பெட்டியில் கை வைத்துள்ளார். பெட்டியில் இருந்த மின்சாரம் சாந்தாவை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இது குறித்த தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாந்தாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அரும்பாவூர் காவல் நிலையத்தினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 00:44:17
Privacy-Data & cookie usage: