பெரம்பலூர் அருகே முன்னே சென்ற லோடு ஆட்டோ மீது டெம்போ டிராவலர் மோதி விபத்து: சென்னையை சேர்ந்த இருவர் படுகாயம்

schedule
2015-09-30 | 17:41h
update
2026-04-19 | 13:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் ; பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்ற லோடு ஆட்டோ மீது டெப்போ டிராவலர் மோதி ஏற்பட்ட விபத்தில் சென்னையை சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சொக்கலிங்கம் மகன் சுடலைமணி(53), செல்வம் மகன் சுரேஷ்(37). இவர்கள் இருவரும் இன்று அதிகாலை ஒரு லோடு ஆட்டோவில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் அருகே உள்ள முருக்கன்குடி பிரிவு பகுதியில் சென்று பொண்டிருந்தனர். அதே வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற டெம்போ டிராவலர் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவின் பின் பகுதியில் எதிர்பாரத விதமாக மோதியது.

Advertisement

வேன் மோதிய வேகத்தில் ஆட்டோ வேகமாக சென்று சாலையோர பள்ளத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் சுடலைமணி மற்றும்
அவருடன் பயணித்த செல்வம் ஆகியோர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்திற்கு காரணமான டெம்போ டிராவலர் வேன் டிரைவரான கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கண்ணபிரானை(32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 13:45:42
Privacy-Data & cookie usage: