பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வன் வேப்பந்தட்டை ஒன்றியங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு

schedule
2016-05-03 | 08:39h
update
2026-06-23 | 19:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியேில் அதிமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் இரா.தமிழ்செல்வன் இன்று வேப்பந்தட்டை ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பந்தட்டையில் தனது பிரச்சாரத்தை துவங்கிய வேட்பாளர் இரா.தமிழ்செல்வன், பாலையூர், தொண்டப்பாடி, அனுக்கூர், நெய்க்குப்பை மேட்டுப்பாளையம், சாத்தனவாடி, என்.புதூர், மேட்டுப்பாளையம், வாலிகண்டபுரம், வல்லாபுரம், பிரம்ம தேசம், வி.ஆர்.எஸ்.புரம், அ.குடிக்காடு, சிறுவயலூர், அழகாபுரி உள்ளிட்ட 15 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக பொது மக்கள் மற்றும் முதியவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கி பேசிய வேட்பாளர் தமிழ்ச்செல்வன்,

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தால் பொது மக்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடனே செய்து தருவதாக உறுதியளித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது கட்சி தொண்டர்கள், ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அந்தந்த பகுதி பொது மக்கள் வெடி வெடித்தும், சால்வை அணிவித்தும், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 19:07:56
Privacy-Data & cookie usage: