பெரம்பலூர் : தமிழ்நாடு மின்சார வாரிய இயக்கலும் காத்தலும் பிரிவு உதவி செயற்பொறியாளர் கி.மாணிக்கம் தெரிவித்துள்ளதாவது :
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதந்திர பாராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் ஆக.21ம் தேதி நடைபெற உள்ளது.
அதனால், பெரம்பலூர் நகர பகுதிகளான பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு, வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, அரணாரை, சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், கடைவீதி, பாலக்கரை, புதிய பேருந்து நிலையம், நான்குரோடு, மின்நகர், துறைமங்கலம். மற்றும், கிராமிய பகுதிகளான சிறுகுடல், பீல்வாடி, அசூர், சித்தளி, எளம்பலூர், வடக்குமாதவி, இந்திரா நகர், போலீஸ் குடியிருப்பு, சமத்துவபுரம், கே.புதூர், செங்குணம், அருமடல், கீழப்புலியூர், எஸ்.குடிக்காடு, ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (ஆக.21ம் தேதி) காலை 9.45 மணி முதல் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்த உடன் மின் வினியோகம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.