பெரம்பலூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

schedule
2016-03-14 | 17:15h
update
2026-06-22 | 06:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே வாலிபர் ஒரு வாலிபர் விஷம் குடித்தும், மற்றொரு வாலிபர் குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பந்தலுக்கும் செங்குணம் பிரிவு பாதைக்கும் இடையே வசிப்பர் பாலசுந்தரம் மகன் ராஜேந்திரன்(29), இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த உம்மாஹமீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ராஜேந்திரன் அவரது குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு வந்தவர் இரவு விஷம் குடித்து விட்டு இறந்து கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரனின் மாமியார் குடும்பத்தினர். சம்பவம் குறித்து ரஜேந்திரனின் தந்தை பாலசுந்தரத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த பாலசுந்தரம் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.ஐ.,பெரியசாமி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதேபோல் மற்றொரு சம்பவம்:

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் குணராஜா(எ) சவரிமுத்து மகன் ராஜா(36), இவர் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ராஜா வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதபற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 06:50:22
Privacy-Data & cookie usage: