பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளின் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

schedule
2016-04-22 | 18:14h
update
2026-06-23 | 09:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்றத் தொகுதிகளில் உள்ள 638 வாக்குச்சாவடி மையங்களும் 63 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டலங்களுக்கென்று தனித்தனியே மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அலுவலர்களுக்கு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் 33 மண்டலங்களும், குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 30 மண்டலங்களும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த மண்டல அலுவலர்கள் தேர்தல் பணியில் எவ்வாறு ஈடுபட வேண்டும், என்னென்ன பணிகள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த பயிற்சி வகுப்பு இன்று (22.04.2016) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

பெரம்பலுhர; மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மண்டல அலுவலர;கள் மூலமாக பொதுமக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்கும் விதம் குறித்து விளக்கமளித்தனர். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை முதல் இரண்டு நாள்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவது குறித்து விரவான, விளக்கமான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த மண்டல அலுவலர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் பணியாற்ற நியமிக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 2,552 அலுவலர்களுக்கு தேர்தல் நாளில் வாக்குச்சாவடி நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பயிற்சி வகுப்பை எடுக்க உள்ளனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

மண்டல அலுவலர்கள் அனைவரும் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள வாக்குச்சாவடி மையங்களை முழுமையாக ஆய்வு செய்து குடிநீர், கழிவறை, சாய்தளப் பாதை, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கிறதா என்று ஆய்வு செய்யவேண்டும்.

மேலும், வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்ல வேண்டிய சாலைகள், பாதைகள் நல்ல நிலையில் உள்ளதா என்றும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் இடம் குறித்து வாக்காளர்களுக்கு எளிதில் அடையாளம் காட்டிட ஏதுவாக வழிக்காட்டி பலகைகள் அமைக்க்பட வேண்டும்.

என தெரிவித்தார். அரசு அலுலர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 09:15:27
Privacy-Data & cookie usage: