பெரம்பலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது

schedule
2015-09-24 | 13:19h
update
2026-06-17 | 08:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

இஸ்லாமியர்களால் தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மவுலானா, நூர், துறைமங்கலம், டவுன் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இதேபோல் மாவட்டத்தின் பிறபகுதிகளான வாலிகண்டபுரம், தேவையூர், லப்பைக்குடிக்காடு, வ.களத்தூர், பெரியம்மாபாளையம், பூலாம்பாடி, அரும்பாவூர், விஜயபுரம், தொண்டைமாந்துறை, விசுவக்குடி, முஹமதுபட்டினம் ஈச்சம்பட்டி, அம்மாபாளையம், டி.களத்தூர், பாடாலூர், உள்ளிட்ட பல ஊர்களில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் பலர் கலந்து கொண்டனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பலர் குர்பானியை தங்களது உற்றார், உறவினர்களுக்கு வழங்கினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 08:08:16
Privacy-Data & cookie usage: