பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுகவினரின் மக்கள் சந்திப்பு பயணம் : ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

schedule
2015-10-31 | 18:56h
update
2026-06-18 | 04:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர்: தமிழக அரசின் நான்கான்டு சாதனைகளை விளக்கும் வகையில் “மக்கள் சந்திப்பு பயணம்” இன்று மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில் அதிமுக சார்பில் நடத்தினர்.

தமிழக அரசின் கடந்த நான்கான்டு சாதனைகளை விளக்கும் வகையில் மக்கள் சந்திப்பு பயணம் நிகழ்ச்சி இன்று பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்திலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் துவங்கப்பட்டு, பெரம்பலூர் ஒன்றியத்தின் எளம்பலூரிலும், வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டபுரத்திலும், லப்பைக்குடிகாடு பேரூர் கழகம் வேப்பூர் ஒன்றியத்தின் குன்னத்திலும் ஆலத்தூர் ஒன்றியம் மருதையான் கோவில் ஆகிய பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் பேரணியாக சென்று மக்களை சந்தித்து சாதனைகளை விளக்கினர். இதில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், மற்றும் கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் பெரும் திராளாக கலந்து கொண்டனர். பெரம்பலூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கான தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 04:10:53
Privacy-Data & cookie usage: