பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காற்றழுத்த தாழ்வு நிலைய காரணமாக நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இதில், நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை நல்ல மழை பொழிந்தது. தொண்டைமாந்றை – தழுதாழை இடையேயான பாலத்தில் கல்லாறு பாலத்தில் தண்ணீர் மிதந்து சென்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பபு ஏற்பட்டுள்ளது. இதே போன்று கோனேரி ஆறு, குளங்கள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயரத் துவங்கியுள்ளது.

பெரம்பலூரில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)

பெரம்பலூர் 53 , வேப்பந்தட்டை 20 , தழுதாழை 18, செட்டிக்குளம் 31 , பாடாலூர் 34, மொத்த மழையளவு : 156 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு: 33.12 மி.மீ என பதிவாகி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!