தமிழ்நாட்டில் முதல் முறையாக பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகளும் இணையதளத்துடன் இணைக்கப்பட்டு நவம்பர; 1-ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் 99 சதவீத குடும்ப அட்டைகள் இணையதளத்துடன் இணைக்கபட்டதை தொடர்ந்து அதன் செயல்பாடுகள் குறித்தும், அதன் மூலம் நியாய விலைகடைகளில் உணவுப்பொருட்கள் வழங்கப்படும் முறைகள் குறித்துமான ஆய்வுக் கூட்டம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் தெரிவித்ததாவது:
நியாய விலைக்கடைகளில் உள்ள உணவுப்பொருட்களின் வரவு, இருப்பு மற்றும் உணவுப்பொருட்களின் வினியோகம் உள்ளிட்ட அனைத்து செயல்களும் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் கடைகளின் செயல்பாடுகள், கடைகளில் உள்ள உணவுப்பொருட்களின் இருப்பு, அன்றைய தினத்தில் வினியோகிக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களின் விபரம், மேலும் கடைகளுக்கு வரும் பொருட்களின் ஆரம்ப இருப்பு, பொருட்களின் வரவு, விற்பனை செய்யப்படும் பொருட்களின் நிலவரம், தற்போது கடைகளில் மீதம் உள்ள பொருட்களின் விவரங்கள், விற்பனை முடிந்த பின் அன்றைய தினத்தின் ஆரம்ப இருப்பு, அந்நாளிற்கான உணவு பொருட்களின் வரவு, அந்நாளின் மொத்த விற்பனைகள் உள்ளிட்ட தகவல்களை இணையதளத்தின் மூலமாக பொதுமக்கள் காண இயலும். இத்திட்டத்தின் மூலமாக நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகள் மே;மபாடு அடைவதுடன், பொதுமக்களுக்கு சிறப்பான சேவை வழங்குதல் மற்றும் ஊழியர;களின் திறன்மேம்பாடு அடைதல் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கப்பெறும்.
இத்திட்டத்தை செயல்படுத்த அனைத்து நியாய விலைக்கடைகளிலும் கணினி மற்றும் ஆன்லைனில் இணைக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இக்கருவிகளில் குடும்ப அட்டையின் விபரங்கள் கடை ஊழியர்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 99 சதவீத குடும்ப அட்டைகள் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது நியாயவிலைக்கடை ஊழியர;கள் மூலம் பதிவேடுகளில் குறிப்பிடும் அனைத்து தகவல்களும் பொதுமக்களின் செல்பேசிகளுக்கு குறுந்தகவலாக சென்றுவிடும். இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் நியாய விலைக்கடையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க தற்போது உள்ள நடைமுறையில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஒரு நாளின் துவக்கத்தில் உள்ள இருப்பு முதல் முடிவில் உள்ள இருப்பு மற்றும் விற்பனை வரை பொதுமக்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்ள இத்திட்டம் உதவுகிறது, என இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் முத்துக்குமரசாமி, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.