perambalur_collectorateஇது குறித்து மாவடட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாதாவது:

அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக அம்மா திட்டம் (Assured Maximum service to Marginal people in All villages) தமிழக அரசினால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமை தோறும் ஒரு குறுவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம் வட்டாட்சியர் நிலையிலான அலுவலர் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச் சென்று அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், வருவாய்த்துறையின் முதியோர் ஓய்வூதியம், உள்ளிட்ட சமூக பாதுகாப்புத்திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, வீட்டுமனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகியன குறித்த கோரிக்கை மனுக்களின்மீது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்சினைகள், நிலம் சம்மந்தமான பிரச்சினைகளையும் நேரில் ஆய்வு செய்து தீர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வட்டங்களுக்கு உட்பட்ட 152 கிராமங்களில் இதுவரை மூன்று கட்டங்களாக அம்மா திட்ட முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாம்களில் மொத்தம் 44,026 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு முகாமிலேயே விண்ணப்பதாரர்களுக்கு கீழ்கண்டவாறு மனுக்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டன. இதனடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா 535 நபர்களுக்கும், பட்டா மாறுதல்கள்(உட்பிரிவு இல்லாத இனங்கள்) 11,975 நபர்களுக்கும், பட்டா மாறுதல் (உட்பிரிவு இனங்கள்) 379 நபர்களுக்கும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் 84 நபர்களுக்கும், சிட்டா நகல் 257 நபர்களுக்கும், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் 214 நபர்களுக்கும், சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் 694 நபர்களுக்கும், வாரிசரிமைச் சான்றிதழ்கள் 506 நபர்களுக்கும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் 154 விவசாயிகளுக்கும், முதல் பட்டாதாரி அல்லது குடும்பத்தில் பட்டாதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்கள் 75 நபர்களுக்கும், ஆண் வாரிசு இல்லை என்ற சான்றிதழ்கள் 35 நபர்களுக்கும், குடும்பத்தில் இரு பெண்குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ்கள் 51 நபர்களுக்கும், இயற்கை இடா;பாடுகளுக்கான உதவித்தொகை 11 நபர்களுக்கும், முதியோர் உதவித்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும் இதர மனுக்கள் என மொத்தம் 4,398 நபர்களுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் உதவிகள் பெற சமர்பிக்கப்படும் மனுக்கள் மீது தீர்வுகள் 1182 நபர்களுக்கும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் நடவடிக்கயைpன் கீழ் 1084 விவசாயிகள் புதிதாக சேர்க்கப்பட்டும், துயர்துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை 12 நபர்களுக்கும், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் 9,188 நபர்களுக்கும், புதிய குடும்ய அட்டைகள் கோரியவர்களுக்கு தீர்வுகள் 213 நபர்களுக்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட தீர்வுகள் 291 நபர்களுக்கும், இதர துறைகளின் மூலம் நடவடிக்கை கோhp விண்ணப்பித்தவர்களுக்கான தீர்வுகள் 384 நபர்களுக்கும் ஆக மொத்தம் 31,722 நபர்களுக்கு அம்மா திட்ட முகாம்களில் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே பொதுமக்கள் அனைவரும் வருவாய் துறையின் மூலமாக வழங்கப்படும் சான்றிதழ்கள் தேவைப்படுவோர் தங்கள் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் அம்மா திட்ட முகாம்கள் மூலமாக மனு அளித்து தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை, வீண் அலைச்சல், சிரமமின்றி இன்றி பெற்று பயனடைய வேண்டும் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!