பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் சாவு

schedule
2015-07-06 | 17:45h
update
2026-04-16 | 10:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் இன்று உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (18). கூலித்தொழியாளியான இவர், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் கஜேந்திரகுமார் வீட்டில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார்.

இந்நிலையில், அவரது வீட்டின் அருகே திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement

தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் அங்கு சென்று, மணிகண்டனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், அரும்பாவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

அடையாளம் தெரியாத முதியவர் சாவு:

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள நிழற்குடையில் சுமார் 65 வயதுள்ள முதியவர் உடல் நலன் பாதிக்கப்பட்டு கிடந்துள்ளார்.

இதையறிந்த, ரோந்துப்பணி போலீஸார் அந்த முதியவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர் இன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 10:53:27
Privacy-Data & cookie usage: