பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் புஜங்கராயநல்லூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது தலைமையில் இன்று மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

pujangararnallurஇந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் புஜங்கராயநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் சுகாதாரம், நியாயவிலைக்கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கல்வி, போக்குவரத்து வசதி, 108 அவசர ஊர்தி சேவை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், தாட்கோ திட்டம், புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு சங்க நடவடிக்கைகள் குறித்தும் தனித்தனியாக கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை நேரடியாக அழைத்து அதற்குரிய விபரங்களை கேட்டறிந்து பொது மக்களிடம் எடுத்துக் கூறினார். பின்னர் நியாய விலைக்கடைகளில் ஆன்லைனுடன் இணைக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்றும், பொருட்கள் வாங்கினால் உடனுக்குடன் செல்பேசிக்கு குறுந்தகவல் வருகின்றதா என்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கும்போது அதற்கான ஒப்புகைச்சான்றினையும் கட்டாயம் பெற வேண்டும். இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் கிராம நிர்வாக அலுவலகத்தில் தீர்வு தெரிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த முகாமில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 24 நபர்களுக்கு திருமண உதவித்தொகையாக ரூ2 லட்சத்து 6 ஆயிரம், நலிந்தோர் நலித்திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு ரூ.10, ஆயிரம், 7 நபர்களுக்கு தலா ரூ30, ஆயிரம் வீதம் ரூ.2 லட்த்து 10 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களையும், 10 நபர்களுக்கு பட்டா மாற்ற ஆணைகளையும், 6 நபர்களுக்கு புதிய அட்டைகளையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 2 நபர்களுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறையின் மூலமாக ரூ.75,000 அரசு மானிய உதவியுடன் கூடிய பவர் டிரல்லரும் என மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது வழங்கினார்.

இம்முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர் நா.அலமேலு உட்பட வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைச்சாந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கொண்டனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!