Perambalur District Pensioners Grievance Redressal Day Meeting; Collector Notice!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மற்றும் இயக்குநர் /ஓய்வூதிய இயக்குநரகம் தலைமையில், கலெக்டர் கற்பகம் முன்னிலையில் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 10.01.2024 அன்று காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது.

ஆகவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று கரூவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அது குறித்த மனுக்களை 2 பிரதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிர்வரும் 05.01.2024-க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

மேலும், 10.01.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!