பெரம்பலூர் 1 வது வார்டில் சொத்து தகராறு காரணமாக அரசுப் பேருந்து ஓட்டுநர் வெட்டிக் கொலை!

schedule
2015-07-15 | 04:38h
update
2026-04-19 | 13:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: சொத்து தகராறு காரணமாக அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் பெரம்பலூர் அரணாரை பகுதியில் அதிகாலை நேரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் 1வது வார்டு அரணாரை, அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தங்வேலு மகன் வேலுசாமி (வயது.40) அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

Advertisement

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் பணிக்கு செல்வதற்காக வேலுசாமி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து பெரம்பலூரில் உள்ள அரசு பேருந்து பணிமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அரணாரை துறையூர் இணைப்பு சாலையில் பிள்ளையார் கோவில் அருகே வந்த போது அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி சாய்த்தனர். அங்கேயே ஓட்டுநர் வேலுசாமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியினர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேலுசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசார் விசாரனையில் முதல் கட்ட விசாரனையில் சில நாட்களுக்கு முன்னர் வேலுசாமிக்கும், கந்தசாமி என்பவருக்கும் சொத்து தகறாறு இருந்து வந்துள்ளது. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கொலையாளிளை பிடிக்க போலீசார் தீவிரமாக நடவடிக்கைக மேற்கொண்டுள்னர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 13:42:52
Privacy-Data & cookie usage: