பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் நாளை மின் தடை

schedule
2015-07-20 | 14:14h
update
2026-04-16 | 12:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் செவ்வாய்க் கிழமை (ஜூலை.21) மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம் தெரித்துள்ளார்.

இதுகுறித்து இன்று திங்கட் கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Advertisement

பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களில் நாளை செவ்வாய்கிழமை காலை 9.45 மணி முதல் பராரிப்பு பணிகளை நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 12:33:01
Privacy-Data & cookie usage: