விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ்அஹமது தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:
பெரம்பலூர் மின் வட்டத்தில் புதிதாக குன்னத்தை தலைமையிடமாக கொண்டு உபகோட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 21.12.15 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வேப்பூர், துங்கபுரம்,காடூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளுக்காக அரியலூர் மற்றும் பெரம்பலூருக்காக செல்லும் வீண் அலைச்சல் குறைவதுடன் மக்களுக்கான மின்சேவைகளும் அதிகரிக்கும்.
இன்றைய தினம் விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதால் அனைத்து விவசாயிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைதுறையின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 2015-16 நிதி ஆண்டில் 51 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நிறைவேற்றப்படும் அரசு ஆணைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதனை தேவைப்படுவோர் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் இணையதள முகவரிக்கு சென்று இதனை பார்வையிடலாம். மேலும் மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாயிகள் இதனை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பின்னர், அரசு தலைமை மருத்துவமனை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை தொடர;பாக பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும், மருத்துவ முகாம்கள் குறித்தும், பருத்தி கொள்முதல் குறித்தும் சம்மந்தப்பட்ட துறையின் அலுவலர்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதன்பேரில் துறையின் அலுவலர்கள் பேசியதாவது:
ஊரக நலப்பணிகள் துணை இயக்குநர் உதயகுமார் தெரிவித்தாவது:
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் 100 படுக்கை வசதிகளை கொண்ட தாய் சேய் பிரிவு, பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவு, தமிழகத்தில் வேறெந்த அரசு தலைமை மருத்துவமனையிலும் இல்லாத வகையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமணையில் 8 இரத்த சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் ரூ. 10 இலட்சம் மதிப்பீட்டில் இரத்தத்தில் நுண்கிருமிகள் உள்ளதா என்பதை கண்டறிய உதவும் கருவி புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரணமாக 3 நாள்கள் ஆகும் இரத்த பரிசோதனைகள் கூட இக்கருவியின் மூலமாக உடனடியாக இரத்தத்தில் ஏதேனும் கிருமி தொற்று உள்ளதா என்பதை கண்டறிய இயலும். அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது குறித்து ஏதேனும் புகார;கள் இருந்தால் 944982674 என்ற தனது அலைபேசி எண்ணில் எப்போதும் தொடர;புகொண்டு தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார;.
வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர; திரு.சுப்பிரமணி பேசியதாவது:
பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வருகின்ற 7 ஜனவரி 2016, தேதி முதல் வாரந்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் பருத்தி கொள்முதல் செய்யப்பட உள்ளது. வெளிமாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து உங்களின் பருத்தியை கொள்முதல் செய்துகொள்வார்கள். எனவே பருத்தி சாகுபடி செய்யுதுள்ள விவசாயிகள் தங்களது அனைத்து பருத்தியையும் ஒழுங்குமுறை நிலையத்திற்கு கொண்டுவந்து நல்ல விலைக்கு விற்பனை செய்து பயனடைய வேண்டும். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று பருத்தியை விற்பனை செய்வதை விட நமது மாவட்டத்தில் விற்பனை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
கால்நடைத்துறை சிறப்பறிஞர் மருத்துவர் மோகன் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடுகளுக்கு நோய் தாக்கா வண்ணம் தடுப்பூசி போடுவதற்காக 10,000 டோஸ் தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாது 26.12.2015 மற்றும் 27.12.2015 ஆகிய நாட்களில் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. கால்நடை மருத்துவர;கள் அடங்கிய மருத்துவகுழு ஒன்று அமைத்து அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி உள்ளிட்ட பல துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.