பெரம்பலூர் : மங்களமேடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் நாளை 25ந்தேதி மின்
விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவழகன் வெளியிட்ட
செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு தானியங்கி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து, மின் வினியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு,சு.ஆடுதுறை, ஓகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்ன வெண்மணி, பெரியம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை 25ந்தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!