பெரம்லூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், குரூர் ஊராட்சிக்கு உட்பட் மங்கூன் கிராமத்தை சேர்ந்த மக்கள் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.
அதன் விவரம் :
பேருந்து நின்ற செல்ல கோரிக்கை :
துறையூர் பெரம்பலூர் முக்கிய சாலையில் உள்ள மங்கூன் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் இருந்தும் பேருந்துகள் நிறுத்தவதில்லை. அதனால்,
அவசர காலங்களில் , பெரம்பலூருக்கோ, துறையூருக்கோ சென்ற வர முடிவதில்லை. அது குறித்து கடந்த 2009ல் இருந்து 5 ஆண்டுகளாக தொடர்ந்து மனு கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் நடடிவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும்…
மற்றொரு மனுவில் …..
குடிநீர் வினியோகிக்க வேண்டி…
200க்கும், மேற்பட்ட குடுமபங்கள் வசித்து வரும் அப்பகுதியில், கடந்து ஓராண்டாக சீரான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என்பது குறித்து பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் போதுமான குடிநீர் வினியோகம் செய்யததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கும் தங்களுக்கு குடிநீர் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டியும்….
இதே போன்று இன்னொரு மனுவில் கோரியிருப்பதாவது:
ரேசன் கடை வேண்டி…
மங்கூன் கிராமத்தில் 4.5 கி.மீ தொலைவில் குரூர் கிராமத்திற்கு சென்று ரேசன் பொருட்களை வாங்கி வருவது சிரமமாக இருப்பதால்… 160 க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ளதால் அப்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக ரேசன் கடை ஒன்றை அமைத்து தரக் கோரியும் அந்த மனுக்களில் தெரிவித்துள்ளனர்.