மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களையும் அவர்களின் உடமைகளையும் பாதுகாத்திடும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொதுப்பணித்துறை கட்டுபாட்டிலுள்ள அனைத்து ஏரிகளும் தொடர்ந்து கண்கானிக்கப்பட்டு வருகின்றது.
இத்தகைய நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மக்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று பெரம்பலூர் வட்டம் அருமடல் பகுதியில் சேதமடைந்த 6 கூரை வீடுகளுக்கு அரசின் நிவாரன உதவித்தொகையான ரூ.4,100 மற்றும் வேட்டி, சேலைகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், பெரம்பலூர் நகர் மன்ற துணைத் தலைவருமான, அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமசந்திரன், பெரம்பலூர் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயக்குமார், வட்டாச்சியர் செல்வராஜ் மற்றும் கவுல்பாளையம் ஊராட்சித் தலைவர் செல்வகுமார் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.