மின்சாரம் தாக்கி விவசாயி பலி

schedule
2015-12-11 | 15:17h
update
2026-06-18 | 19:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சடையப்பன்(45). இவர் நேற்று மாலை தனது வயலில் உள்ள நெல்பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுன்ளார். அப்போது மின்மோட்டாரை இயக்குவதற்காக மோட்டார் ( ஸ்டாட்டர்) பெட்டியில் கை வைத்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சடையப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது வயலின் மற்றொரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவி செல்லம்மாள் ஏதோ சத்தம் கேட்கிறதே என ஓடி வந்துள்ளார். ஆனால் அவர் வருவதற்குள் கணவர் மோட்டார் பெட்டி அருகே இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மழைநீர் மோட்டார் பெட்டிக்குள் புகுந்து மின்கசிவு ஏற்பட்டு இருந்தது தெரியாமல் சடையப்பன் மோட்டார் பெட்டியில் கை வைத்து மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து வ.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடையப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 19:30:36
Privacy-Data & cookie usage: