மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்வு

schedule
2018-07-22 | 19:14h
update
2018-07-22 | 19:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததை அடுத்து கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 47 ஆயிரத்து 951 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரத்து 333 கனஅடி உபரி நீர் திறக்கப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 81 ஆயிரத்து 284 கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது.தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 66 ஆயிரம் கனஅடியாக உள்ளது. பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் 13 ஆவது நாளாக தடை நீடித்து வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 61 ஆயிரத்து 644 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்திற்கென வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 88.73 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால், அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 11:49:49
Privacy-Data & cookie usage: