ரூ.2.485 கோடி மதிப்பில் 40 தூர்வாரும் பணிகள்: பெரம்பலூரில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!

schedule
2022-04-24 | 12:59h
update
2022-04-24 | 12:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

40 dredging works worth Rs.2.485 crore: Minister Sivasankar started in Perambalur.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரிகளின் வரத்துவாய்கால், உபரிநீர் வாய்க்கால் மற்றும் மருதையாறு வாய்க்காலை 5 கி.மீ தூரத்திற்கு தூர் வாரி கரையைப்பலப்படுத்த ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலும், வேத நதி 8 கி.மீ‌ வாய்க்காலை தூர்வாரி கரையைப் பலப்படுத்த ரூ.20‌ லட்சம் மதிப்பீட்டிலும், வேப்பந்தட்டை, வேப்பூர், குன்னம் ஆகிய பகுதிகளுக்கு ரூ.1 கோடியே 53 லட்சம் என மொத்தம் ரூ.2.48 கோடி மதிப்பிலான மொத்தம் 90 கிலோ மீட்டர் நீளத்திற்கு 40 பணிகளை விளாமுத்தர் எனுமிடத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி‌ சிவசங்கர் கொடியசைத்து தூர் வாரும் பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வெங்கட் பிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன் மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன் மற்றும் செயற்பொறியாளர் கீதா, உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், வினோத் குமார், தங்கையன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 14:54:08
Privacy-Data & cookie usage: