பெரம்பலூர் : கோடை உழவு செய்ய இதுவே உகந்த தருணம். நடமாடும் மண் ஆய்வுக் கூட வாகனத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண்ணை ஆய்வுசெய்து கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் soil testf282caac-8f60-4240-8a12-6b3b8f626fe3_S_secvpf

அதன் விபரம் வருமாறு:

தற்சமயம் நமது மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதுவே கோடை உழவு மேற்கொள்ள உகந்த தருணமாகும். தற்போது பெய்து வரும் கோடை மழையை கொண்டு கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் நீh;ப்பிடிப்பு தன்மை அதிகரித்து மண்ணில் நீர் உறிஞ்சப்படுகிறது. மேலும், உழவு செய்யும் பொழுது மேல் மண், கீழாகவும், கீழே உள்ள மண் மேலாக வரும்பொழுது சாகுபடி செய்யும் பயிர் செழிப்புடன் வளர வாய்ப்பு உள்ளது. மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பிற்கு வரும் பொழுது பறவைகள் மூலம் அழிக்கப்படுவதன் மூலம் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.

பயிh; சாகுடி மேற்கொள்வதற்கு முன் மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து சாகுபடி மேற்கொள்வதன் மூலம் பயிருக்கு தேவையான அளவு உரத்தை மட்டும் இட்டு சாகுபடி செலவை குறைக்க வாய்ப்பு உள்ளது.

21.05.2015 அன்று லாடபுரம்(கி) மற்றும் லாடபுரம்(மே), 22.05.2015 அன்று களரம்பட்டி மற்றும் அம்மாபாளையம், 26.05.2015 அன்று வேலூர், 27.05.2015 அன்று பொம்மனப்பாடி மற்றும் சத்திரமனை, 28.05.2015 அன்று குரும்பலூர் (தெ), 29.05.2015 அன்று எசனை மற்றும் கீழக்கரை ஆகியப் பகுதிகளுக்கு நடமாடும் மண் ஆய்வுக் கூட வாகனம் மூலம் அலுவலர்கள் மண்மாதிரி கள் ஆய்வு மேற்கொள்ள வருகை தர உள்ளார்கள்.

அதுசமயம் அனைத்து விவசாயிகளும் தங்களது வயலில் மண் மாதிரி கள் சேகரித்து வந்து கட்டணமாக ரூ.20-(ரூபாய் இருபது மட்டும்) செலுத்தி மண் ஆய்வு செய்து, அதன்படி உரங்கள் அளவோடு இட்டு சாகுபடி மேற்கொண்டு அதிக இலாபம் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர; தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!